இந்தியாவின் புதுடெல்லி நகரின் வடமேற்குப் பகுதியில் உள்ள ரோகிணி என்ற இடத்தில் வசிக் கும் ரேகா என்பவர் வெள்ளிக் கிழமை பிற்பகலில் லக்ஸ், நீஷு என்ற தனது மூன்று வயது இரட்டை ஆண் பிள்ளைகளை வீட்டில் விட்டுவிட்டு சலவைத்தூள் வாங்கி வர கடைக்குச் சென்றார். திரும்பிவந்து பார்த்தபோது பிள்ளைகளைக் காணவில்லை. உடனே அவர் தன் கணவருக் குத் தகவல் தெரிவிக்க, அவர் விரைந்து வந்து பார்த்தபோது இரண்டு பிள்ளைகளும் சலவை இயந்திரத்தின் உள்ளே சிக்கி இருந்தது தெரியவந்தது.
சலவை இயந்திரத்தில் சிக்கி இரட்டையர் பலி
1 mins read

