சென்னை, கோயம்பேடு காய்கறிச் சந்தையில் கடந்த ஒரு மாதமாக தக்காளி விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. தற்போது ஒரு கிலோ தக்காளி ரூ.35க்கு விற்கப்படுகிறது. வெளிச் சந்தைகளில் சில்லறை விலையில் கிலோ ரூ.45 வரை விற்கப்பட்டு வருகிறது. இதனால் உணவகங்களில் தக்காளி கொண்டு தயாரிக்கப்படும் உணவுகளின் விலை அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது. தமிழகத்தில் பயிரிடப்படும் தக்காளி மாநிலத்தின் தேவைக்கு போதுமானதாக இல்லை. எனவே அண்டை மாநிலங்களில் இருந்து அவை கொண்டு வரப்படுகின்றன. படம்: தகவல் ஊடகம்
தொடர்ந்து அதிகரித்து வரும் தக்காளி விலை
1 mins read
-