சீமைக்கருவேல மரங்களை அகற்ற சிறப்புச் சட்டம்: அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

சீமைக்கருவேல மரங்களை அகற்ற சிறப்புச் சட்டம்: அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

1 mins read
fef35201-dd0b-4c04-8f7e-f53a0fe02969
-

மதுரை: தமிழகமெங்கும் சீமைக் கருவேல மரங்களை அகற்றும் பணி துரித கதியில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இம்மரங்களை அகற்ற ஏதுவாக அடுத்த இரு மாதங்களுக்குள் தமிழக அரசு சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும் என உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. சீமைக்கருவேல மரங்களை அகற்ற உத்தரவிடக் கோரி தொடுக்கப்பட்டுள்ள பொதுநல வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை விசாரித்து வருகிறது. இம்மரங்கள் அதிக அளவு நீரை உறிஞ்சுவதால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து போகிறது என பொதுநல மனுவில் குறிப் பிடப்பட்டு இருந்தது. இந்நிலையில் நேற்று இந்த மனு மீதான விசாரணை மீண்டும் நடைபெற்றபோது, நீதிபதிகள் அதிரடி உத்தரவைப் பிறப்பித்தனர்.

இன்றைய செய்திகள்: தமிழ்முரசின் இ-பேப்பரில் பார்க்கவும்