திருச்சி: ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், நாகையி லும் திருச்சியிலும் போராட்டம் நடத்திய இளையர்கள் 28 பேர் கைதாகி உள்ளனர். இதற்கிடையே, இத்திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் 70 கிரா மங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் நேற்று நெடுவாசலில் ஆலோசனை நடத்தினர். புதுக்கோட்டை மாவட்டம் வட காடு அருகே உள்ளது நெடுவாசல். விவசாயத்துக்குப் பெயர் பெற்ற இக்கிராமம் அருகே ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுக்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. ஆனால் இத்திட்டத்தால் நில வளமும் நீர் வளமும் கடும் பாதிப் புக்குள்ளாகும் என இயற்கை ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர். இதையடுத்து இத்திட்டத்தை ரத்து செய்யக் கோரி போராட்டம் வெடித் துள்ளது.
ஹைட்ரோ கார்பன் திட்டம்: வலுக்கிறது மக்கள் எதிர்ப்பு
1 mins read
-

