'என் தேசம் என் உரிமை' கட்சியில் இதுவரை 6 லட்சம் உறுப்பினர்கள்

'என் தேசம் என் உரிமை' கட்சியில் இதுவரை 6 லட்சம் உறுப்பினர்கள்

1 mins read
e7c30c62-525e-4031-91d7-a0e0f7a62e7f
-

சென்னை: ஜல்லிக்கட்டுக்காக போராடிய இளையர்கள் துவங்கி யுள்ள 'என் தேசம் என் உரிமை' என்ற புதிய கட்சியில் இணையம் வழி 6 லட்சம் பேர் இணைந்துள் ளதாகக் கூறப்படுகிறது. இது குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் எபினேசர், ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக தங்கள் கட்சி போராட்டம் நடத்தப் போவ தாக அறிவித்தார். ஊழல் அற்ற தமிழகத்தை உருவாக்குவது, சாதி, மதச்சார்பற்ற நாட்டை உருவாக்குவது, மதுவை அறவே ஒழிப்பது ஆகியவைதான் தங்கள் கட்சியின் முக்கிய கொள் கைகள் என்று குறிப்பிட்ட அவர், இளையர்கள் நினைத்தால் மாற் றத்தைக் கொண்டு வர முடியும் என்பதை தங்கள் கட்சி நிரூபிக்கும் என்றார். உள்ளாட்சித் தேர்தலிலும், ஆர்கே நகர் தொகுதி இடைத் தேர்தலிலும் இப்புதிய கட்சி போட்டியிட உள்ளது.

இன்றைய செய்திகள்: தமிழ்முரசின் இ-பேப்பரில் பார்க்கவும்