பாதுகாப்பற்ற ஏடிஎம் இயந்திரங்கள் இந்தியா முழுவதும் உள்ள ஏடிஎம்

பாதுகாப்பற்ற ஏடிஎம் இயந்திரங்கள் இந்தியா முழுவதும் உள்ள ஏடிஎம்

1 mins read

இயந்திரங்களில் பெரும்பாலா னவை பழைய தொழில்நுட்பத்தில் இயங்கி வருவதாகவும் மோசடிக்கு அவை எளிதில் இலக்காகக்கூடும் என்றும் வங்கியியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். புழக்கத்தில் உள்ள 220,000 ஏடிஎம் இயந்திரங் களில் பெரும்பாலானவற்றில் பாது காப்பு அம்சங்கள் குறைவாக உள் ளதால் கள்ளநோட்டுப் பேர்வழி களுக்கு அவை வசதியாக உள்ள தெனக் கூறும் அவர்கள், ஏராள மான இயந்திரங்கள் கண் காணிப்புக் கருவிகளின்றி இயங் குவதாகவும் சொல்கின்றனர். உலகம் முழுவதும் பொதுவாகப் பயன்படுத்தப்படும் 'ஒடிசி' பாது காப்பு அம்சத்தை பணம் நிரப்பு வோர் கடைப்பிடிப்பதில்லை என் றும் அவர்கள் தங்கள் இஷ்டத் துக்கு எப்போது வேண்டுமானா லும் அந்த இயந்திரங்களைக் கையாளும் நிலை உள்ளதாகவும் நிபுணர்கள் கவலைப்படுகின்றனர்.