பிரகாசம்: தனியார் பேருந்து ஒன்று பிரகாசம் மாவட்டத்தின் பெத்தா அல்லவால்பாடு பகுதியில் உள்ள சிறிய ஆறு ஒன்றில் நேற்று அதிகாலை வேளையில் விழுந்தது. அந்த விபத்தில் குறைந்தது 30 மாணவர்கள் காயமுற்றதாக செய்திகள் தெரிவிக்கின்றன. காயமடைந்தவர்களில் 17 மாணவர்கள் ஓங்கோலில் உள்ள மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டனர். உலவப்பாடு மண்டலத்தின் காரேடு கிராமத்தில் இருக்கும் பள்ளி மாணவர்கள் 78 பேருடன் கர்னூல் மாவட்டத்தில் உள்ள சில இடங்களுக்குச் சுற்றுலா சென்று திரும்பும் வழியில் இந்த விபத்து நேர்ந்ததாகக் கூறப்படுகிறது.
பேருந்து ஆற்றில் கவிழ்ந்ததில் 30 மாணவர்கள் காயம்
1 mins read

