விசாரணையை விரைவுபடுத்தக் கோரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

விசாரணையை விரைவுபடுத்தக் கோரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

1 mins read
68053370-6111-4370-baf9-54f86fc4001c
-

அகில பாரதிய வித்யார்தி பரிஷத் எனும் மாணவர் அமைப்பின் உறுப்பினர்கள் புதுடெல்லியில் உள்ள போலிஸ் தலைமையகத் திற்கு வெளியில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். புதுடெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் சென்ற ஆண்டு நடைபெற்ற ஒரு நிகழ்வில் மாணவர் தலைவர்களான கன்யா குமார், உமா காலிட் ஆகியோர் காஷ்மீர் பிரிவினைவாதிகளுக்கு ஆதரவாக கோஷமிட்டதை அடுத்து அவர்கள் மீது சுமத்தப் பட்ட தேச துரோகக் குற்றச்சாட்டு பற்றிய விசாரணையை விரைந்து மேற்கொள்ளுமாறு மாணவர்கள் வலியுறுத்தினர். கன்யா குமார், உமா காலிட் மீது குற்றப் பத்திரிகை சமர்ப்பிப்பதகுற்குத் தேவையான ஆதாரங்களை போலிசார் திரட்டி வருவதால் சென்ற ஆண்டு பிப்ரவரியில் கைது செய்யப்பட்ட இருவர் மீதும் இன்னும் குற்றப்பத்திரிகை சமர்ப்பிக்கப்படவில்லை. படம்: ஏஎஃப்பி