4 தடவைக்கு மேலான ஏடிஎம் பயன்பாட்டுக்கு ரூ.150 கட்டணம்

4 தடவைக்கு மேலான ஏடிஎம் பயன்பாட்டுக்கு ரூ.150 கட்டணம்

1 mins read

இந்தியாவிலுள்ள முன்னணி தனி யார் வங்கிகள் நான்கு தடவைக்கு மேலான ஏடிஎம் ரொக்கப் பரிமாற் றத்துக்கு குறைந்தபட்சச் கட்டண மாக ரூ.150 வசூலிக்கத் தொடங்கி உள்ளன. புதன்கிழமை (நேற்று முன்தினம் முதல்) இக்கட்டண முறை நடப் புக்கு வந்துள்ளது. சேமிப்புக் கணக்குக்கும் சம்பளக் கணக் குக்கும் இது பொருந்தும். மேலும், அடுத்தவர் கணக்கில் பணம் செலுத்துவதற்கான உச்ச வரம்பை நாள் ஒன்றுக்கு ரூ.25 ஆயிரம் என்று ஹெச்டிஎஃப்சி வங்கி நிர்ணயித்துள்ளது. ஐசிஐசிஐ வங்கி இந்த உச்சவரம்பை ரூ.50 ஆயிரமாக நிர்ணயித்துள்ளது. ரொக்கம் கையாள்வதற்கான கட் டணத்தை ஹெச்டிஎஃப்சி திரும்பப் பெற்றுக்கொண்டுள்ளது.