தண்ணீர்க் கட்டண உயர்வு குறித்த பொது விவாதம், தண் ணீர் எவ்வளவு விலைமதிப்பு மிக்கது என்பதை பொதுமக்க ளுக்கு நினைவூட்டும் என நம்பு வதாக பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் சிங்கப்பூரர் களிடம் ஆழமான விவாதங்களை தூண்டியுள்ளதாக பிரதமர் லீ தமது ஃபேஸ்புக் பதிவில் குறிப் பிட்டுள்ளார். தண்ணீர்க் கட்டணம் அடுத்த ஈராண்டுகளில் 30 விழுக்காடு உயர்த்தப்படும். எனினும் அதி கரிக்கும் வாழ்க்கைச் செல வினத்தைச் சமாளிக்க குறைந்த, நடுத்தர வருவாய்க் குடும்பங் களுக்கு மானியங்கள் வழங்கப் படவுள்ளன.
கட்டணம் குறித்து விவாதிப்பது தண்ணீரின் மதிப்பை நினைவூட்டும் - பிரதமர் லீ
1 mins read

