கூடுதல் பாதுகாப்பு அம்சங் களுடன் வெளியான 2,000 ரூபாயிலும் கள்ள நோட்டுகள் வெளிவரத் தொடங்கியுள்ளதால் இந்திய அரசு அதிர்ச்சியடைந்து இருக்கிறது. கோல்கத்தாவில் நேற்று முன் தினம் 20 வயதுகளில் இருந்த ஐவரிடமிருந்து ரூ.56.74 லட்சம் மதிப்பிலான 2,000 ரூபாய் கள்ள நோட்டுகளை போலிசார் கைப்பற் றினார். அங்குள்ள கைபேசிக் கடை உரிமையாளர் ஒருவர், வாடிக் கையாளர்கள் சிலர் தந்த 2,000 ரூபாய் நோட்டுகள் குறித்து சந்தேகப்படுவதாக போலிசிடம் தகவல் தெரிவித்தார். இதையடுத்து, விரைந்து சென்ற சமூக விரோதிகள், ரவுடிகள் ஒழிப்பு போலிஸ் அதி காரிகள் அந்த ஐந்து இளையர் களையும் சோதித்து, அவர்களி டமிருந்த கள்ள நோட்டுகளைப் பறிமுதல் செய்தனர். அந்த ஐவரும் கைது செய்யப்பட்டனர்.
ரூ.56 லட்சம் கள்ள நோட்டு பறிமுதல்
1 mins read

