மாஸ்கோ: சிரியாவில் ஐஎஸ் போராளிகள் வசம் இருந்த வரலாற்று சிறப்பு மிக்க பழமைவாய்ந்த பல்மேரா நகரை சிரியா ராணுவத்தினர் திரும்பக் கைப்பற்றியுள்ளனர். பல மாதங்கள் நீடித்த சண்டைக்குப் பிறகு சிரியா ராணுவத்தினர் ரஷ்ய விமானத் தாக்குதல்களின் உதவியுடன் அந்நகரை கைப்பற்றியுள்ளதாக ரஷ்ய தற்காப்பு அமைச்சர் செர்ஜி சோய்கு, ரஷ்ய அதிபர் புட்டினிடம் தெரிவித்ததாக ரஷ்ய அதிபர் மாளிகையின் பேச்சாளர் கூறியுள்ளார். கலை அம்சங்கள் நிறைந்த அந்நகரை ஐஎஸ் போராளிகள் கைப்பற்றியது முதல் அங்குள்ள பல கலைக்கூடங்கள் அழிக்கப்பட்டன. அந்நகரை திரும்பக் கைப்பற்றுவதில் சிரியா படையினர் மிகுந்த சிரமத்தை எதிர்நோக்கினர். அவர்களுக்கு ரஷ்யா உதவியதால் அந்நகரை சிரியா ராணுவம் கைப்பற்ற முடிந்தது.
சிரியாவில் ஐஎஸ் வசம் இருந்த நகரைக் கைப்பற்றியது ராணுவம்
1 mins read

