சென்னை: எச்1என்1 காய்ச்சல் தொடர்பாக பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சுற்றுலா நகரங்க ளுக்கோ, வெளிநாடுக ளுக்கோ சென்று வந்தவுடன் காய்ச்சல் ஏற்பட்டால் உடனே ரத்தப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டுமென அத்துறை அறிவுறுத்தி உள்ளது. தமிழகத்தில் எச்1என்1 காய்ச்சல் வேகமாக பரவி வருவதாகவும், மாநிலம் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இக்காய்ச்ச லால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எச்1என்1 காய்ச்சல்: சுகாதாரத்துறை அறிவுறுத்து
1 mins read

