சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு

சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு

1 mins read

சென்னை: கடந்த சில நாட்களாக சென்னையில் கடும் குடிநீர் பஞ்சம் நிலவி வருவதாகத் தெரிகிறது. இதனால் பொது மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். வழக்கமாக சென்னையில் ஏப்ரல் முதல் ஜூன் வரையில் தான் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும். ஆனால் இந்த ஆண்டு மார்ச் துவக்கத்திலேயே இப்பிரச்சினை தொடங்கிவிட்டது. சென்னையின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில தினங்களாக குடிநீர் விநியோகம் சீராக இல்லை. இதனால் தனியாரிடம் இருந்து தண்ணீர் வாங்கி நிலைமையைச் சமாளிக்க வேண்டியுள்ளது. இதனால் செலவுகள் அதிகரிப்பதாக பொது மக்கள் புலம்புகின்றனர்.