புதுக்கோட்டை: மக்களைப் பாதிக்கும் திட்டங்கள் செயல்படுத்தப் படமாட்டாது என தமிழக அரசு உறுதியளித்துள்ள போதிலும், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடும் வரை போராட்டம் தொடரும் என போராட்டக் குழுவினர் திட்டவட்டமாகத் தெரி வித்துள்ளனர். இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து புதுக் கோட்டை மாவட்டம் நெடுவாசலில் மக்கள் 17ஆவது நாளாக நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். நெடுவாசல் செல்லும் வழி யில் போலிசார் நிறுத்தப்பட்டுள்ளனர். போராட்டத்தில் பங்கேற்கச் செல்பவர்கள் ஆயுதம் எதுவும் கொண்டு செல்கின்றனரா, தடை செய்யப்பட்ட இயக்கத்தை சேர்ந்தவர்கள் வருகின்றனரா? என்று காவல்துறை தீவிரமாகக் கண்காணித்து வருகிறது.
நெடுவாசல்: போராட்டத்தைக் கைவிட மாட்டோம் என திட்டவட்ட அறிவிப்பு
1 mins read

