தொடர்ந்து பதினேழாவது நாளாக நீடித்த நெடுவாசல் போராட்டம்

தொடர்ந்து பதினேழாவது நாளாக நீடித்த நெடுவாசல் போராட்டம்

1 mins read
624b4aa5-89e8-4eed-ba24-e683a35cbb19
-

மீத்தேன் என்னும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசலில் நேற்று முன்தினம் நடைபெற்ற போராட்டத்தில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு ஆதரவு தெரிவித்தார். அப்போது, எரிவாயு எடுக்கும் திட்டத்துக்குத் தடை விதிக்க மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார். புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் ஆலமரத்தடியில் எரிவாயு எடுக்கும் திட்டத்துக்கு எதிராக தொடர்ந்து 17 நாட்களாக இப்போராட்டம் நடந்து வருகிறது. படம்: தகவல் ஊடகம்