'குற்றவாளிக்கு இன்னும் ஏன் அமைச்சர் பதவி'

'குற்றவாளிக்கு இன்னும் ஏன் அமைச்சர் பதவி'

1 mins read

பாலியல் பலாத்கார வழக்கில் சிக்கியுள்ள அமைச்சரை இது வரை ஏன் பதவியில் இருந்து நீக்கவில்லை என உ.பி. முதல்வர் அகிலேஷ் யாதவுக்கு ஆளுநர் கேள்வி எழுப்பியுள்ளார். உ.பி. மாநிலத்தில் போக்கு வரத்து அமைச்சராக இருக்கும் காயத்ரி பிரஜாபதி தன்னைப் பாலியல் பலாத்காரம் செய்ததாக இளம்பெண் ஒருவர் குற்றஞ் சாட்டியதன் தொடர்பில் அமைச்சர் பிரஜாபதி மீது பிணையில் வெளிவர முடியாத கைதாணை பிறப்பிக்கப்பட்டது. எனினும் அவர் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்படவில்லை. இந்நிலையில் உ.பி. முதல்வர் அகிலே‌ஷிடம் ஆளுநர் ராம்நாயக், குற்றஞ் சாட்டப்பட்டுள்ள பிரஜா பதியை இன்னும் அமைச்ச ரவையில் வைத்திருப்பதற்கான காரணம் என்ன என விளக்கம் தரும்படி கேட்டுக் கொண்டுள்ளார்.