சகாயம் குழு விசாரணையை தடுப்பது ஏன்?: கிருஷ்ணசாமி

சகாயம் குழு விசாரணையை தடுப்பது ஏன்?: கிருஷ்ணசாமி

1 mins read

சென்னை: கனிம வள முறைகேடு குறித்து விசாரணை நடத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயம் தலைமையிலான விசாரணைக் குழுவுக்கு தமிழக அரசு ஒத்துழைப்பு கொடுக்க மறுப்பது ஏன்? என்று டாக்டர் கிருஷ்ணசாமி கேள்வி எழுப்பியுள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், சகாயம் குழுவுக்கு அரசு ஒத்துழைக்காவிட்டால் 19ஆம் தேதி போராட்டம் நடத்தப்படும் என அறிவித்தார். ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கில் என்ன நடந்தது, அவருக்கு எப்படி தண்டனை வழங்கப்பட்டு உள்ளது என்பதை மக்கள் மத்தியில் கொண்டு செல்லும் கடமை திமுகவுக்கு உள்ளது என்றும் அவர் கூறினார்.