மதுரை: தமிழக அரசு கோரியுள்ள வறட்சி நிவாரண நிதியை வழங்காமல் மத்திய அரசு ஏமாற்றி வருவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலர் ஜி. ராமகிருஷ்ணன் குற்றம்சாட்டி உள்ளார். மதுரையில், மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து நடந்த பிரசார பயணத் துவக்க விழாவில் பேசிய அவர், தமிழகத்தில் ஊழலும் வறட்சியும் போட்டி போட்டுக் கொண்டு மக்களை தாக்குவதாக வேதனை தெரிவித்தார். "வறட்சியால் இருநூறுக் கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரை மாய்த்துக் கொண் டுள்ளனர். ஆனால் 17 பேரின் குடும்பத்திற்கு மட்டும் அரசு நிவாரணம் வழங்கியுள்ளது ஏற்புடையதல்ல," என்றார் ராமகிருஷ்ணன்.
வைகோ மீதான பொடா வழக்கு அதிரடி ரத்து
1 mins read

