இலங்கை கடற்படை மீது வழக்குப் பதிவு; தங்கச்சிமடத்தில் தொடரும் போராட்டம்

இலங்கை கடற்படை மீது வழக்குப் பதிவு; தங்கச்சிமடத்தில் தொடரும் போராட்டம்

1 mins read

தங்கச்சிமடத்தைச் சேர்ந்த 21 வயது பிரிட்ஜோ மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கைக் கடற்படையினர் சுட்டுக் கொன்ற தன் தொடர்பில் நேற்று இரண்டாவது நாளாக தங்கச்சி மடத்தில் உள்ள குழந்தை ஏசு தேவாலயத்தின் முன்பு மீனவர்கள் போராட்டத்தைத் தொடர்ந்தனர். பிரிட்ஜோவின் உடலை வாங்க அவரது குடும்பத்தார் மறுத் துள்ளனர். இதுபோன்ற தாக்குதல் கள் நிகழாமல் இருப்பதற்கு மத்திய அரசின் பிரதிநிதி நேரடியாக வந்து உறுதியளிக்கும் வரை போராட்டம் தொடரும் என போராட்டக்காரர்கள் தெரிவித் துள்ளனர்.