புதுடெல்லி: இந்தியாவில் முதல் ஐஎஸ்ஐஎஸ் தாக்குதல் ரயிலில் நடத்தப்பட்டதை அடுத்து கைது செய்யப்பட்ட பயங்கரவாதிகளின் குடும்பத்தார், "நாட்டுக்கு எதி ராகச் செயல்புரிந்தவர் எங் களுக்கும் எதிரியே," என்று குறிப் பிட்டுள்ளனர். பயங்கரவாத எதிர்ப்பு போலி சாரால் நேற்று முன்தினம் கொல்லப்பட்ட சைஃபுல்லா எனும் பயங்கரவாதியின் தந்தை, "ஒரு பயங்கரவாதி எனக்கு மகனாக இருக்க முடியாது," என்று கூறி அவனது உடலைப் பெற்றுக் கொள்ள மறுத்துள்ளார். அவரது நாட்டுப்பற்றைக் கண்டு பெருமை கொள்வதாக இந்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டியுள்ளார். சைஃபுல்லாவை அதிகாரிகள் சுட்டுக்கொன்ற அதே தெருவில் வசிக்கும் ஜி.எம். கானின் மகன், தனது தந்தை நாட்டுக்கு துரோகியாக இருந்தால் தங் களுக்கும் எதிரிதான் என்று கூறியதுடன் அவரது நடவடிக் கைகளுக்கும் தங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று கூறியுள்ளார்.
'மகன் நாட்டின் எதிரியானால் எங்களுக்கும் எதிரியே'
1 mins read

