முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா மறைவால் காலியாக இருக்கும் சென்னை ராதா கிருஷ்ணன் (ஆர்கே) நகர் தொகு திக்கு அடுத்த மாதம் 12ஆம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப் பட்டுள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை இடைத்தேர்தல்களில் எப்போதும் ஆளும் கட்சியே வென்று வந்திருக்கிறது. ஆனால் இம்முறை அந்த வரலாற்றை மாற்றி எழுதும் முனைப்பில் இருக்கிறது எதிர்க் கட்சியான திமுக. அதிமுக மூன்று அணிகளாகப் பிளவுபட்டிருப்பது தனது வெற் றியை எளிதாக்கிவிடும் என்று திமுக கருதுகிறது. ஜெயலலிதா மறைவை அடுத்து அதிமுக தலைமைப் பொறுப்பைக் கைப்பற்றுவதில் கடும் போட்டி நிலவுகிறது. சசிகலா தலைமையில் ஓர் அணியாகவும் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தலைமையில் இன்னோர் அணியாகவும் அதிமுக உடைந்துள்ளது.
அதிமுகவில் பூசல்; மகிழ்ச்சியில் திமுக
1 mins read

