சசிகலா: பொதுச் செயலாளர் நியமனத்தில் விதி மீறல் இல்லை

சசிகலா: பொதுச் செயலாளர் நியமனத்தில் விதி மீறல் இல்லை

1 mins read
ea0878e2-f61d-48f0-968e-0d0f4c938ccc
-

சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் நியமன விவகாரம் தொடர்பில் எந்த விதி மீறலும் இல்லை என்று தேர்தல் ஆணையத் துக்கு சசிகலா பதில் அளித்து இருக்கிறார். 70 பக்கங்கள் கொண்ட பதில் கடிதத்தை சசி கலாவின் வழக்கறிஞர்கள் ராகேஷ் சர்மா, பரணி குமார் ஆகிய இருவரும் டெல்லியில் தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்தனர். "கட்சியின் பொதுக்குழுதான் என்னை பொதுச் செயலாளராக தேர்வு செய்தது. அதிமுக தேர்தல் விதிகளுக்கு உட்பட்டே அனைத்து நியமனங்களும் நடந்தன. அவைத் தலைவராக இருந்த மதுசூதனன் ஒப்புதலும் பெறப்பட்டது. புகார் தெரிவித்தோர் எல்லாம் என்னை தேர்வு செய்ய முன்மொழிந் தவர்கள். எனவே அதிமுக பொதுச் செயலாளர் நியமனத்தில் எந்த விதிமீறலும் நடைபெறவில்லை," என்று சசிகலா பதில் அளித்து உள்ளார்.

முழுவிவரம்: epaper.tamilmurasu.com.sg