உபி, உத்தரகண்ட்டில் பாஜக அமோக வெற்றி

உபி, உத்தரகண்ட்டில் பாஜக அமோக வெற்றி

1 mins read
61faacc9-72b4-46b6-a714-1c3e23401330
-

இந்தியாவின் ஐந்து மாநிலங் களின் சட்டமன்றத் தேர்தலில் உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட் மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சி அமோக வெற்றியைப் பெற்றுள்ளது. தேர்தலில் கிடைத்த அபார வெற்றிக்குப் பிறகு பேசிய பிரதமர் மோடி, 125 கோடி இந்தியர்களின் பலத்தின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருப்பதாகக் கூறினார். "சமூகத்தில் உள்ள பல தரப்பு மக்களிடையே பாஜக வுக்குப் பெரும் ஆதரவு கிடைத் திருக்கிறது. குறிப்பாக இளை யர் அளித்திருக்கும் பேராதரவு மகிழ்ச்சியைத் தருகிறது. கட்சி யின் வெற்றிக்காக அயராது உழைத்த கட்சித் தொண்டர் களுக்கு எனது பாராட்டுகள். சிரமம் பாராது அவர்கள் அடித் தள அளவில் கடுமையாக உழைத்து மக்களின் நம்பிக் கையை வென்றனர்," என்றார் திரு மோடி.

பாரதிய ஜனதா கட்சியின் வெற்றியை ஆடிப் பாடிக் கொண்டாடும் அக்கட்சி ஆதரவாளர்கள். படம்: ஏஎஃப்பி