அமிர்தசரஸ்: பாரதிய ஜனதா கட்சியிலிருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் சித்து, பஞ்சாப் மாநிலத்தில் அமிர்தசரஸ் (கிழக்கு) தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். பாரதிய ஜனதா வேட்பாளர் ராஜேஷ் குமார் ஹனியைவிட சித்து 42,809 வாக்குகள் அதிகம் பெற்றார். கடந்த 2012ஆம் ஆண்டு இதே தொகுதியில் நடைபெற்ற தேர்தலில் பாஜக வேட்பாளராக போட்டியிட்ட சித்துவின் மனைவி நவ்ஜோத் கவுர் சித்து வெற்றிபெற்று இந்தத் தொகுதியின் எம்எல்ஏவாக இருந்து வந்தார்.
கிரிக்கெட் வீரர் சித்து வெற்றி
1 mins read
-

