இம்பால்: மணிப்பூரில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இரோம் ஷர்மிளா சொற்ப வாக்கு களைப் பெற்று தோல்வி அடைந்தார். மணிப்பூரில் ஆயுதப்படை சட்டத்தை எதிர்த்து 16 ஆண்டுகள் உண்ணாவிரதம் இருந்த இவர், கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்த பிறகும் உண்ணாவிரதத்தைத் தொடர்ந்ததால் இரும்பு மங்கை என்று அழைக்கப்பட்டார். உண்ணாவிரதத்தை கைவிட்டு தேர்தலில் போட்டி யிட்ட ஷர்மிளாவுக்கு 85 வாக்குகளே கிடைத்துள்ளன. இவரது மக்கள் எழுச்சி மற்றும் நீதி கூட்டணியும் போட்டியிட்ட மூன்று தொகுதிகளில் தோல்வி அடைந்தது.
இரும்பு மங்கை படுதோல்வி
1 mins read
-

