மாசிமகப் பெருவிழாவையொட்டி கும்பகோணம் மகாமக குளத்தில் நேற்று முன்தினம் அதிகாலை முதல் மாலை வரை சுமார் 50,000 பக்தர்கள் புனித நீராடினர். பக்தர்களுக்குத் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை போலிசார், தீயணைப்பு வீரர்கள், அறநிலையத் துறையினர், மருத்துவக் குழுவினர், வருவாய்த் துறையினர் இணைந்து செய்திருந்தனர். கும்பகோணத்தில் ஆண்டுதோறும் மாசி மாதத்தில் வரும் மக நட்சத்திரத்தன்று மாசி மகப் பெருவிழா கொண்டாடப்படுகிறது. இதே விழா 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மகாமகப் பெருவிழாவாகவும் கொண்டாடப்படும். படம்: தகவல் ஊடகம்
மாசிமகம்: மகாமக குளத்தில் 50,000 பேர் நீராடல்
1 mins read
-

