மேலும் ஓர் எம்எல்ஏ வருகை: ஓபிஎஸ் அணியின் பலம் அதிகரிப்பு

மேலும் ஓர் எம்எல்ஏ வருகை: ஓபிஎஸ் அணியின் பலம் அதிகரிப்பு

1 mins read

சென்னை: ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு கோவை வடக்கு தொகுதி எம்எல்ஏ அருண்குமார் ஆதரவு தெரிவித்துள்ளார். இதையடுத்து, ஓபிஎஸ் அணி ஆதரவு எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது. இவர், அண்மையில் நடைபெற்ற முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பைப் புறக்கணித்தவர். சசிகலா தரப்பை தற்போது கடுமையாகச் சாடியுள்ளார் அருண். இதனிடையே சென்னையில் நடைபெற்ற ஜெயலலிதா பிறந்தநாள் விழாவில் பேசிய டிடிவி தினகரன், எம்எல்ஏ அருண்குமார் விரைவில் தங்கள் அணிக்கு வருவார் என்று தெரிவித்துள்ளார்.