கைபேசிக்காக மாணவர் படுகொலை

கைபேசிக்காக மாணவர் படுகொலை

1 mins read

மதுரை: கைபேசிக்காக பன்னிரண்டாம் வகுப்பு மாணவனை வழிப்பறிக் கொள்ளையர்கள் கொலை செய்ததாக நம்பப்படுகி றது. மதுரையைச் சேர்ந்த நாகராஜ் என்ற அம்மாணவரை நேற்று முன்தினம் மர்ம நபர்கள் கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளனர். அவரிடம் இருந்த கைபேசியைப் பறிப்பதற்காக வழிப்பறிக் கொள்ளையர்கள் அவரைக் கொன்றிருப்பதாக காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 12ஆம் வகுப்பு தேர்வு நடைபெற்றுவரும் நிலையில், மாணவர் கொலை செய்யப்பட்டுள்ளது சக மாணவர்களைத் துயரில் ஆழ்த்தி உள்ளது.