நாடு முழுவதும் ஹோலி பண்டிகை சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. வடஇந்தியர்கள் அதிகம் வசிக்கும் வடசென்னைப் பகுதியில் ஹோலி களைகட்டியது. வண்ணப் பொடிகளைத் தூவியும் வண்ண நீரைப் பீய்ச்சியும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை குதூகலமாகக் கொண்டாடினர். இதனால் அங்குள்ள சாலைகள் மக்கள் கூட்டத்துடன் வண்ணமயமாகக் காட்சியளித்தன. படம்: சதீஷ்
'ஹோலி'யால் வண்ணமயமான வடசென்னை
1 mins read
-

