தருண் விஜய்: ஊழல் அரசியல்வாதிகள் கதாநாயகர்கள் அல்ல

தருண் விஜய்: ஊழல் அரசியல்வாதிகள் கதாநாயகர்கள் அல்ல

1 mins read
a9ca1312-2ef2-4b7a-aa5b-521554a0149a
-

தர்மபுரி: ஊழலில் திளைக்கும் அரசியல்வாதிகளைக் கதாநாயகர் களாக ஏற்கக்கூடாது என பாஜக முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் தருண் விஜய் அறிவுறுத்தி இருக்கிறார். தர்மபுரியில் நடைபெற்ற பாராட்டு விழாவில் பங்கேற்றுப் பேசிய அவர், சுப்பிரமணிய பாரதியும் சுப்பிரமணிய சிவாவும்தான் உண்மையான கதாநாயகர்கள் என்றார். "தமிழ்நாட்டுக்கு மட்டுமல்லா மல் ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் திருவள்ளுவர் சொந்தம். தமிழர் கள் தங்களது பாரம்பரியத்தையும் பண்பாட்டையும் தொன்மையையும் மதிக்க வேண்டும். உங்களது குழந்தைகளைத் தமிழில் படிக்க வையுங்கள். "பாரதியும் சுப்பிரமணிய சிவா வும் நம்முடைய கதாநாயகர்கள். ஊழலில் திளைக்கும் அரசியல் வாதிகள் வள்ளுவத்துக்கு எதி ராகச் செயல்படுகிறார்கள்," என்றார் தருண் விஜய்.