டெல்லி தெருவில் நிர்வாணமாக உதவி கேட்ட நேப்பாள பெண்

1 mins read

புதுடெல்லி: டெல்லியில் பாலியல் பலாத்காரர்களிடமிருந்து தப்பிய நேப்பாள பெண் தெருக்களில் நிர் வாணமாக உதவி கேட்டு கதறி அழுதார். கிழக்கு டெல்லியில் பாண்டவ் நகர் குடியிருப்பு வட்டாரத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்த அவர், முதல் மாடியிலிருந்து குதித்துத்தப்பினார். உடலில் பொட்டுத் துணி யில்லாமல் அவர் உதவி கேட்டதை பலர் வேடிக்கை பார்த்தனரே தவிர உதவி செய்யவில்லை. அவரைக் கும்பலாக ஐந்து பேர் பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் அதிலிருந்து அவர் தப்பி வெளி யேறியதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர். தற்போது ஐவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.