முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா மறைவை அடுத்து அதிமுகவில் உட்கட்சிப் பூசல் வெடித்ததால் அந்தக் கட்சியே இரண்டாக உடைந்தது. ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியாக இருந்த சசிகலா தரப்பில் ஓர் அணி, அவரது நம்பிக்கைக்கு உரியவராகத் திகழ்ந்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தலைமை யில் இன்னோர் அணி என அதிமுக பிளவுபட்டுள்ளது. இருந்தபோதும் ஏராளமான அரசியல் குழப்பங்களுக்கிடையில் சசிகலா தரப்பு அதிமுகவைச் சேர்ந்த எடப்பாடி பழனிசாமி முதல்வராக அரியணை ஏறினார். அவர் ஒப்புக்குத்தான் முதல்வர், உண்மையில் சிறையிலிருக்கும் சசிகலாவும் அவரால் அதிமுக துணைப் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்ட தினகரனும்தான் ஆட்சி செய்கின்றனர் என்றும் பரவலாகப் பேச்சு நிலவுகிறது.
'இரட்டை இலை' வேண்டி டெல்லி விரைகிறார் ஓபிஎஸ்
1 mins read
-

