சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான தமிழக அரசு, ஏழை மக்களைப் பற்றி சிறிதும் கவலைப்பட வில்லை என முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் குற்றம்சாட்டி உள்ளார். ஒரு மாதமாக, அத்தியாவசியப் பொருட்களை கொள் முதல் செய்வதில், தற்போதுள்ள பினாமி அரசு காலதாமதத்தை ஏற்படுத்தி கடும் தட்டுப்பாட்டை உருவாக்கி உள்ளதாக அறிக்கை ஒன்றில் அவர் சாடியுள்ளார். "எம்ஜிஆர், ஜெயலலிதா ஆட்சிக் காலங்களில், ரேசன் கடைகளில், அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாடு என்றைக்குமே இருந்தது இல்லை. அதற்கு நேர்மாறாக, தற்போதைய பினாமி அரசு, ஏழை மக்களை பற்றி சிறிதும் கவலைப்படாமல், பொது வினியோகத் துறையை பலவீனப்படுத்துவதை அறிய முடிகிறது," என ஓ.பன்னீர்செல்வம் மேலும் தெரிவித்துள்ளார்.
ஏழை மக்களைப் பற்றி கவலைப்படாத அரசு: பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு
1 mins read

