வங்கிகள், ஏடிஎம்களில் இனி விருப்பம்போல் பணமெடுக்கலாம்

வங்கிகள், ஏடிஎம்களில் இனி விருப்பம்போல் பணமெடுக்கலாம்

1 mins read
Google News Preferred Icon

மும்பை: வங்கிகள், ஏடிஎம் மையங் களில் வங்கிக் கணக்கு வைத் திருக்கும் வாடிக்கையாளர்கள் இனி அவர்களது விருப்பம் போல் கூடவோ, குறையவோ தேவைக் கேற்ப பணம் எடுக்கலாம் என அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக விதிக்கப்பட்டு இருந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் நேற்று முதல் நீக்கப்பட்டுள்ளன. இதற்கான உத்தரவை ரிசர்வ் வங்கி பிறப்பித்துள்ளது. இந்தக் கட்டுப்பாடுகள் அனைத்தும் நீக்கப்பட்டதன் மூலம் வங்கிகள், ஏடிஎம் மையங்களில் இருந்து பணம் எடுப்பதற்கு நவம்பர் 8ஆம் தேதிக்கு முன்னர் எந்த நடைமுறைகள் பின்பற்றப் பட்டதோ அவை அனைத்தும் தற்போது அமலுக்கு வந்துள்ளன. இந்த அறிவிப்பை ரிசர்வ் வங்கி துணை ஆளுநர் ஆர்.காந்தி நேற்று வெளியிட்டார்.