ராஜஸ்தான் மாநிலத்தில் இந்திய விமானப் படைக்குச் சொந்தமான விமானம் விழுந்து நொறுங்கியது. வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்த அந்த விமானம் பார்மர் மாவட்டத்தின் சடர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஷிவ்கர் கிராமத்தில் இருக்கும் வயல்வெளியில் நேற்று பிற்பகல் விழுந்து நொறுங்கியதாக அப்பகுதியில் வசிக்கும் மக்கள் காவல்துறைக்குத் தகவல் அளித்தனர். விபத்துக்குள் ளான விமானத்தில் சென்ற இரு பயிற்சி விமானிகளும் அவசர கதவைத் திறந்து பாராசூட் வழியாக கீழே குதித்து உயிர் தப்பியதாகவும் இந்த விபத்தில் ஷிவ்கர் கிராமத்தைச் சேர்ந்த ஒரு குழந்தை, பெண் உள்பட மூவர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. படம்: ஏஎஃப்பி
விமானப் படை விமானம் விழுந்தது
1 mins read
-

