மணிப்பூர் முதல்வராக பைரன் சிங் பதவியேற்பு

மணிப்பூர் முதல்வராக பைரன் சிங் பதவியேற்பு

1 mins read
efd278b8-3942-4be3-ad81-6db5c556022a
-

இம்பால்: இம்பாலில் நடைபெற்ற பதவியேற்புச் சடங்கில் நொங்தாம் பாம் பைரன் சிங் மணிப்பூரின் முதல் பாஜக முதல்வராக பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்பட்டார். முதல்வருடன் மற்றும் சில அமைச்சர்களும் பதவியேற்றனர். நாகா மக்கள் கட்சியைச் சேர்ந்த ஒய்.ஜாய்குமார் துணை முதல் வராக பதவியேற்றுக் கொண்டார். வடகிழக்கு மாநிலங்களில் அசாம், அருணாசலப்பிரதேசத்தை அடுத்து மூன்றாவது மாநிலமான மணிப்பூரில் பாஜக அரசாங்கம் ஆட்சி அமைக்கிறது. பாஜகவின் மூத்த தலைவர்கள் அமித் ஷாவும் வெங்கையா நாயுடு வும் இந்தப் பதவியேற்பு சடங்கில் கலந்து கொள்வதற்காக இம்பால் வந்திருந்தனர். மணிப்பூர் மாநிலத்தின் முதல் வராக பைரன் சிங்கும் துணை முதல்வராக என்பிபி கட்சியைச் சேர்ந்த ஒய்.ஜாய்குமாரும் பதவி யேற்றனர்.

மணிப்பூர் மாநில முதல்வராக பதவியேற்ற பைரன் சிங்குக்கு அம்மாநில ஆளுநர் நஜ்மா ஹெப்துல்லா பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார். படம்: ஊடகம்