ஜெயக்குமார்: கச்சத்தீவை மீட்பதே தீர்வு

ஜெயக்குமார்: கச்சத்தீவை மீட்பதே தீர்வு

1 mins read

நாகை: கச்சத்தீவை மீட்பதன் மூலம் இந்தியாவின் கடல் எல்லை மேலும் விரிவடையும் என மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக் குமார் தெரிவித்துள்ளார். இலங்கை அரசைக் கண்டித்து நாகப்பட்டினத்தில் மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டம் மேற் கொண்டுள்ளனர். அவர்களுடன் அமைச்சர்கள் ஜெயக்குமாரும் ஓ.எஸ்.மணியனும் பேச்சுவார்த்தை நடத்தினர். இதன் பின்னர் செய்தியாளர் களிடம் பேசிய அமைச்சர் ஜெயக் குமார், மீனவர்களுக்கு தமிழக அரசு என் றுமே உறுதுணையாக இருக்கும் என்றார். "கச்சத்தீவை மீட்பதே தமிழக மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வாக அமையும். கச்சத்தீவை மீட்டால் இந்திய கடல் எல்லை விரிவடையும். இந்திய, இலங்கை மீனவர்களுக்கு இடையேயான பிரச்சினைகளுக்கு மத்திய அரசு தீர்வு காண வேண்டும்," என்றார் அமைச்சர் ஜெயக் குமார். முன்னதாக மீனவர்கள் தங்க ளுடைய போராட்டத்தைக் கைவிட வேண்டுமென இரு அமைச்சர் களும் கோரிக்கை விடுத்தனர்.