வெயிலின் தீவிரத்தைச் சமாளிக்க போக்குவரத்து போலிசாருக்கு நேற்று முன்தினம் முதல் பாக் கெட் மோர் வழங்கப்பட்டது. கோடைகாலம் முடியும் வரை தினமும் மோர் வழங்கப்பட உள்ளது. தொடர்ந்து 122 நாள் இவ்வாறு பாக்கெட் மோர் வழங்கப்பட உள்ளது. முதற் கட்டமாக சென்னையில் உள்ள போக்குவரத்து போலிசார் 2,500 பேருக்கு தலா 2 வீதம் 5,000 மோர் பாக்கெட்டுகள் வழங் கப்பட்டன. காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை 2 மணி நேரத்துக்கு ஒரு முறை குளிர்பானம் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. படம்: தகவல் ஊடகம்
போக்குவரத்து போலிசாருக்கு தினமும் மோர் விநியோகம்
1 mins read
-

