தமிழ்ப் பாடத்தில் அரியானா மாணவர்கள் முதலிடம்

தமிழ்ப் பாடத்தில் அரியானா மாணவர்கள் முதலிடம்

1 mins read

இந்தியாவின் அஞ்சல் துறைக்கு நடந்த தேர்வில் அரியானாவைச் சேர்ந்த பல மாணவர்கள் தமிழ்ப் பாடத்தில் அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளதை தேர்வில் பங்கேற்ற தமிழக மாணவர்கள் கண்டு பிடித் துள்ளனர். அஞ்சல் துறை பணிகளுக்கான தேர்வு முடிவுகள் செவ் வாயன்று வெளியானது. அரியானா மாணவர்களிடம் தொலைபேசியில் பேசிய பின்னர் இதில் முறைகேடு நடந்திருக்கும் என்ற ஊகம் ஊர்ஜிதமானதால், மதுரையில் இருந்து தேர்வெழுதிய 40 மாணவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். இது பற்றி எந்தத் தகவலும் எங்களுக்குத் தெரியாது என்று அஞ்சல் துறையின் மூத்த அதிகாரி கூறியுள்ளார்.