வண்ணப்பொடி சிந்தியதால் தலித் கொலை

வண்ணப்பொடி சிந்தியதால் தலித் கொலை

1 mins read

ராஞ்சி: ஜார்கண்ட் மாநிலத்தில் ஹோலி பண்டிகை நாளில் மேல் சாதிக்காரர் மீது வண்ணப் பொடியைத் தூவிய தலித்தை அடித்துக் கொன்றுள்ள சம்பவம் நடந்துள்ளது. கோடர்மா என்ற மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில்தான் இச்சம்பவம் நடந்தது. ஹோலி பண்டிகை தினத்தன்று அந்தக் கிராமத்திலிருக்கும் எல்லோரை யும் போல்தான் பிரதீப் சவுத்ரி என்பவரும் பிறர் மீது வண்ணப் பொடியைத் தூவி உற்சாகமாகக் கொண்டாடினார். அப்போது அவரது வண்ணப்பொடி சவுகிதார் ராஜேந்தர் யாதவ் என்ற மேல் சாதிக்காரர் மீது விழுந்துள்ளது. உடனே ராஜேந்தர் யாதவுக்கு கோபம் பொங்கிவர காவல்துறை யினரை அழைத்து பிரதீப்புக்கு சரியான பாடம் கற்பியுங்கள் என்று கூறியுள்ளார்.