இரட்டை இலைச் சின்னம்: இரு தரப்பினரும் முன்னிலையாக ஆணை

1 mins read

அதிமுகவின் வெற்றி வரலாற்றில் இரட்டை இலைச் சின்னத்துக்கு முக்கிய இடம் உண்டு. ஆர்.கே.நகர் தொகுதியில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் இரட்டை இலைச் சின்னத்துக்கு ஓபிஎஸ், சசிகலா ஆகிய இரு தரப்பினரும் உரிமை கோருவதால் இரு தரப்பும் எதிர்வரும் 22ஆம் தேதி காலை 10.30 மணிக்கு புதுடெல்லியில் உள்ள தேர்தல் ஆணைய அலுவலகத்தில் நேரில் முன்னிலையாகுமாறு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தல் அடுத்த மாதம் 12ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் இம்மாதம் 16ஆம் தேதி தொடங்கியது. இதில் சசிகலா அணியின் சார்பில் டிடிவி.தினகரனும் ஓ.பன்னீர்செல்வம் அணியின் சார்பில் மதுசூதனனும் போட்டி யிடுவதாக அறிவித்துள்ளனர். அதிமுகவின் இரட்டை இலைச் சின்னத்தைப் பெற இரு அணியினரும் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இரு தரப்பினரும் மாறி மாறி தேர்தல் ஆணையத்தில் மனு அளித்தும் நேரில் முன்னிலையாகி விளக் கமளித்தும் வருகின்றனர்.