இலங்கைக்கு எதிராக மதிமுக ஆர்ப்பாட்டம்

இலங்கைக்கு எதிராக மதிமுக ஆர்ப்பாட்டம்

1 mins read
897fa869-bc6a-4c0d-a67c-e1e571b57d7d
-

இலங்கை அரசைக் கண்டித்து மதிமுக சார்பில் நேற்று முன்தினம் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற வைகோ, வெள்ளையன் உள்பட ஏராளமானோர் கைதானார்கள். ஆர்ப்பாட்டத்தில் பேசிய வைகோ, இலங்கைத் தமிழர்களை கொன்று குவித்த இலங்கை அரசுக்கு ஆதரவாக இந்தியா செயல்படக்கூடாது என வலியுறுத்தினார். "இலங்கைக்கு ஆதரவாக இங்கிலாந்தும் அமெரிக்காவும் செயல்படுகின்றன. ஐநாவில் இலங்கைக்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்க கூடாது. ஐநாவில் இலங்கையின் தீர்மானம் நிறைவேறினால் மனித உரிமை கவுன்சில் நீதி குழி தோண்டி புதைக்கப்படும்," என்றார் வைகோ. படம்: சதீஷ்