இந்தியாவில் போலியாக 23 பல்கலைக் கழகங்களும் 279 தொழில்நுட்பக் கல்வி நிலையங்களும் செயல்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வருடாந்திர மறுஆய்வைத் தொடர்ந்து, உயர்கல்விக்கான 'யுஜிசி' அமைப்பும் தொழில்நுட்பக் கல்விக்கான அனைத்துலக மன்றமும் (ஏஐசிடிஇ) தங்களது இணையத்தளங்களில் இத் தகைய போலி கல்வி நிலையங்களின் பட்டியலை வெளியிட்டு, மாணவர்கள் கவனமாக இருக்குமாறு அறிவுறுத்தி இருக்கின்றன. "அங்கீகாரம் பெறாத, ஒழுங்கு முறைக்கு உட்படாத தொழில்நுட்பக் கல்வி நிலையங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும் வகையில் அவற்றின் பட்டியலை சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுக்கு அனுப்பி இருக்கி றோம்," என்று அதிகாரி ஒருவர் கூறி னார்.
இந்தியாவில் 23 போலி பல்கலைக்கழகங்கள்
1 mins read

