ஓபிஎஸ் அணியுடன் நெருங்கும் எம்எல்ஏக்கள்: சசி அதிர்ச்சி

ஓபிஎஸ் அணியுடன் நெருங்கும் எம்எல்ஏக்கள்: சசி அதிர்ச்சி

1 mins read
702a5dcd-c31c-4468-8646-6226342ec7c6
-

சென்னை: சசிகலா அணியைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் ஓ.பன்னீர் செல்வம் அணியைச் சேர்ந்தவர் களிடம் திடீர் நெருக்கம் பாராட்டி வருவதாகத் தகவல்கள் தெரிவிக் கின்றன. இதனால் சிறையில் உள்ள சசிகலா கடும் அதிர்ச்சி அடைந்திருப்பதாகக் கூறப்படு கிறது. அதிமுக தற்போது 3 அணி களாகப் பிளவுபட்டுள்ளது. இவற் றுள் சசிகலாவுக்கும், பன்னீர் செல்வத்துக்கும் இடையேதான் கடும் மோதலும் போட்டியும் நிலவுகிறது. இரு தரப்புமே இரட்டை இலை சின்னத்தைப் பெறுவதில் முனைப்பாக உள்ளன. இந்நிலையில், இரு தினங்க ளுக்கு முன்பு வரை எதிரும் புதிருமாக இருந்த இருதரப்பு எம்எல்ஏக்களும் இப்போது திடீ ரென ஒருவருக்கொருவர் நெருக் கம் பாராட்டி வருகின்றனர். குறிப் பாக சட்டப்பேரவையில் இரு தரப்பினருமே சகஜமாகப் பேசுவ தும் சிரிப்பதும் என பழைய நட்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.