புதுடெல்லி: நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஓய்வூதியம் உள்ளிட்ட பிற சலுகைகளை நிறுத்தக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்குப் பதில் அளிக்குமாறு கேட்டு மத்திய அரசு மற்றும் தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஊதியம் தவிர பேருந்து, ரயில், விமானத்தில் செல்ல சலுகைகள் வழங்கப்படுகின்றன. இலவசத் தொலை பேசி வசதி, நாடாளுமன்ற கூட்டத் தொடரில் பங்கேற்றால் தினப்படி உட்படப் பல்வேறு சலுகைகள் வழங்கப் படுகின்றன. இந்நிலையில் ஓய்வூதியம் உட்பட சலுகைகளை நிறுத்தக் கோரி என்ஜிஓ சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை நேற்று விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி ஜே.செலமேஸ்வர் தலைமையிலான அமர்வு மக்களவை மற்றும் மாநிலங்களவை பொதுச் செயலாளருக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.
'எம்பிகளின் சலுகைகளை நிறுத்துங்கள்'
1 mins read

