இந்திய எம்.பி.க்கு விமான நிறுவனங்கள் தடை

இந்திய எம்.பி.க்கு விமான நிறுவனங்கள் தடை

1 mins read

விமான சேவை நிறுவனத்தின் நிர்வாகியைக் காலணியால் பல முறை அடித்து, கீழே தள்ளிவிட முயன்ற சிவசேனா கட்சி நாடாளு மன்ற உறுப்பினரை இனி தங் களது விமானங்களில் பயணம் செய்ய அனுமதிக்கப்போவதில்லை என்று 'ஏர் இந்தியா' உள்ளிட்ட ஐந்து விமான சேவை நிறு வனங்கள் அறிவித்துள்ளன. மகாராஷ்டிர மாநிலம், ஒஸ்மா னாபாத் தொகுதி எம்.பி.யான ரவீந்திர கெய்க்வாட்'ஏர் இந்தியா' விமானத்தில் 'பிசினஸ்' வகுப்பில் எப்போது வேண்டுமானாலும் பய ணம் செய்யும் வகையில் 'ஓப்பன் டிக்கெட்' வைத்திருக்கிறார். அந்த வகையில், நேற்று முன் தினம் காலையில் புனேயிலிருந்து அவர் டெல்லி சென்றார். அந்தக் குறிப்பிட்ட நேரத்திற்கான விமா னத்தில் அனைத்து இருக்கை களும் 'இக்கானமி' வகுப்பைச் சேர்ந்தவை. இருந்தாலும், கெய்க்வாட் சற்று சௌகரியமாக அமரட்டும் என்ப தற்காக அவருக்கு முதல் வரிசை யில் இருக்கை ஒதுக்கப்பட்டது.