சிறுமியருக்கு பாலியல் துன்புறுத்தல்

சிறுமியருக்கு பாலியல் துன்புறுத்தல்

1 mins read

ஆலங்குடி: புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள நெம்மக்கோட்டை கிராமத்தில் சதீஷ்குமார் என்பவர் தமது குடும்பத்துடன் வசித்து வருகிறார். கடந்த 19ஆம் தேதியன்று தமது 6 வயது மகளை வீட்டில் விட்டுவிட்டு மனைவியுடன் அவர் பொருட்கள் வாங்க கடைக்குச் சென்றுவிட்டார். அப்போது சிறுமியுடன் பக்கத்து வீட்டு 7 வயது சிறுமியும் விளையாடிக் கொண்டிருந்தார். அங்கு சென்ற சதீஷ்குமாரின் உறவினரான கூலித் தொழிலாளி மணி அந்த இரு குழந்தைகளையும் அழைத்துச் சென்று பாலியல் துன்புறுத்தல் செய்துவிட்டு நடந்ததை யாரிடமும் சொல்லக்கூடாது என மிரட்டி உள்ளார். இந்நிலையில் சிறுமிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால் சதீஷ்குமாரின் மனைவி தமது மகளிடம் விசாரித்துள்ளார். அப்போது மணியின் அத்துமீறல்கள் தெரியவந்தன. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் போலிசில் புகார் செய்தனர். இதன் பேரில் வழக்குப்பதிவு செய்த போலிசார் மணியைக் கைது செய்தனர்.