3 இடங்களில் 100 டிகிரி வெயில்: தமிழகத்தில் அனல் வீசுகிறது

3 இடங்களில் 100 டிகிரி வெயில்: தமிழகத்தில் அனல் வீசுகிறது

1 mins read

சென்னை: கோடை காலம் துவங்கும் முன்பே தமிழகத்தில் அனலடிக்கத் துவங்கிவிட்டது. தற்போது மூன்று இடங்களில் வெயில் நூறு டிகிரியைக் கடந்துள்ளது. அதிகபட்சமாக வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் நேற்று முன்தினம் 101.84 டிகிரி வெயில் பதிவானது. சேலத்தில் 100.58 டிகிரி வெயிலும், வேலூரில் 100.04 டிகிரி வெயிலும் சுட்டெரித்தது. மற்ற மாவட்டங்களில் 100 டிகிரிக்கும் குறைவாகத்தான் இருந்தது. சென்னை நுங்கம்பாக்கத்தில் 92 டிகிரியும், கொடைக்கானலில் 67 டிகிரியும், ஊட்டியில் 74 டிகிரியுமாக வெயில் பதிவானது.