விபத்து: 4 கல்லூரி மாணவிகள் பலி

விபத்து: 4 கல்லூரி மாணவிகள் பலி

1 mins read

குமரி: கல்லூரி மாணவிகள் சென்ற வேன் மீது லாரி மோதிய விபத்தில் 4 மாணவிகள் பரிதாபமாக பலியாகினர். நேற்று முன்தினம் கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே இந்த சோக சம்பவம் நிகழ்ந்தது. தனியார் கல்லூரிக்குச் சொந்தமான வேன் ஒன்றில் மாணவிகள் சிலர் சென்றுகொண்டிருந்தனர். அப்போது எதிரே வந்த லாரி ஒன்று, வேன் மீது பயங்கர வேகத்தில் மோதியது. இதில், சிவரஞ்சனி, தீபா, மஞ்சி, சங்கீதா ஆகிய நான்கு மாணவிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். 15 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து போலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.